“மேட்டர் என்ன..” – போலீஸ் ஸ்டேஷன் படி ஏறிய வனிதா..!

362

பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதிக்கு மகளாக பிறந்த நடிகை வனிதா. விஜயின் சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமாகிய இவர், பல்வேறு மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஏற்கனவே இரண்டு நபர்களை திருமணம் செய்துக்கொண்ட வனிதா, அந்த வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். பின்னர், தனியாக வசித்து வந்த இவர், தற்போது பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்துக்கொண்டார்.

இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெறாமல், வனிதாவை திருமணம் செய்துக்கொண்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், வனிதாவை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை வனிதா காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பி விடுவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி, ஒரு குறிப்பிட்ட ஒரு பெண் வனிதா பற்றி அவதூறு கருத்துகளை பரப்பி வருவதாகவும் அந்த புகாரில் வனிதா தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of