“இந்த கணக்க புரிஞ்சிக்க முடியலையே.!” மீண்டும் நுழையும் வனிதா..! ஆட்டமே இனி தான்..!

634

பிக்-பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றுக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டுவிஸ்ட் வச்சி அதிர்ச்சியளிக்கும் பிக்-பாஸ், இந்த வாரமும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளார்.

பிக்-பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியேற்றப்பட்ட வனிதா விஜயகுமார், இந்த வாரம் மீண்டும் நுழைய இருக்கிறார். ஆனால் இந்த முறை அவர், சிறப்பு விருந்தினராக மட்டுமே கலந்துக்கொள்ள இருக்கிறார்.

ஏற்கனவே சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். வனிதாவை பற்றி செல்லவே வேண்டும், அவர் எப்பவுமே மற்ற போட்டியாளர்களிடம் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுபவர்.

இந்த இருவரும் பிக்-பாஸ் வீட்டிற்குள் ஒரே நேரத்தில் இருக்க உள்ளதால், பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement