பிக்-பாஸ் வீட்டில் ஏற்பட்ட டுவிஸ்ட்! வனிதா நீடிப்பதில் சிக்கல்!

1228

பிக்-பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கி தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், விஜயகுமாரின் மகள் வனிதா போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

இவர் மீது அவரது முன்னாள் கணவர், தனது மகளை திருடியதாக புகார் அளித்திருந்த நிலையில், மகள் யாரிடம் இருக்கு விரும்புகிறாரோ அவரிடம் தான் குழந்தை ஒப்படைக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வனிதாவின் மகள், அம்மாவுடன் இருப்பதற்கு தான் விருப்பம் என்று கூறியதால், குழந்தையை கவனிக்க வேண்டிய பொறுப்பு வனிதாவுக்கு ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து மகளை யார் கவனிப்பது என்று ராஜன் கேள்வி எழுப்ப. தான் வீட்டை விட்டு வெளியே வர தயார் என்று வனிதா கூறியுள்ளதாக சொல்கிறார்கள். இதனால் பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதா தொடரமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement