அதிமுக – பாமக கூட்டணி – மரியாதையே போச்சு… – சங்கத் தலைவர் வேதனை

799

பாமக அதிமுக வுடன் கூட்டணி வைத்தது தொடர்பாக வன்னியர் சங்கத் தலைவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பாமக-அதிமுக கூட்டணி உறுதியாகிய நிலையில் 7 சீட்டும், ஒரு ராஜ்யசபா எம் பி யும் பாமக விற்கு அதிமுக வழங்கியுள்ளது.

இந்த நிலையில் வன்னியர் சங்க தலைவர் அதிமுக – பாமக கூட்டணி குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

vanniyar sangam
பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் வன்னியர் சமூகம் அதிர்ச்சியில் உறைந்ததாக தெரிவித்த அவர், அன்புமணி மீது அளப்பறிய மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருந்தோம். இப்பொழுது அந்த மரியாதை குறைந்துவிட்டதாக தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், அன்புமணி முதல்வரானால் நான் முதன்முதலில் போடும் கையெழுத்து மதுவிலக்கு என்று சொன்னவுடன் வன்னியர் சமூகம் பூரித்து போனோம். அவர்மீது வைத்திருந்த நம்பிக்கையால் தான் அவருக்கு வாக்களித்தோம்.

ஆனால் அவர் எந்த கட்சியை பகிரங்கமாக எதிர்த்தாரோ அதே கட்சியில் கூட்டணி வைத்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

மேலும் செய்தியாளர்கள் அவரிடம், பாமகவை எதிர்த்து பிரச்சாரம் செய்வீர்களா என்ற கேள்விக்கு, அது குறித்து விரைவில் அறிவிப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of