கிராம நிர்வாக அதிகாரிகள் போராட்டம், ஊதியம் கிடையாது – அரசு உத்தரவு

618

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் எழுதியுள்ள கடிதத்தில், குறிப்பிட்ட அளவிலான கிராம நிர்வாக அதிகாரிகள் கடந்த10ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். எனவே முறையாக தற்செயல் விடுப்பு அனுமதிக்கப்படாத நிலையில், அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால், அதனை அங்கீகரிக்கப்படாத விடுமுறையாக கருதி ஊதியத்தை பிடித்தம் செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் பணிக்கு வராத அரசு அதிகாரிகள் எந்த சலுகையையும் பெற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.