“வரத்” என்ற ரோந்து கப்பல் நாட்டுக்காக அர்ப்பணிப்பு

266

சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள L&T தனியார் கப்பல் கட்டும் தளத்தில் பாதுகாப்பு அமைச்சகத்திற்குத் தேவையான ரோந்து கப்பல்கள், அதிவேக இடைமறிக்கும் படகுகள் ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘வரத்’ என்ற ரோந்து கப்பல் கடலோரக்
காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து தொலைதொடர்பு, ஆயுதங்கள், பாதுகாப்புக் கருவிகளைப் பொருத்தும் பணி நிறைவடைந்த நிலையில் ‘வரத்’ கப்பலை முறைப்படி கடலோரக் காவல் படையில் இணைக்கும் நிகழ்ச்சி சென்னை துறைமுகத்தில் நடைபெற்றது.

Ship

கடலோரக் காவல் படை தலைமை இயக்குநர் கே.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கப்பல் போக்குவரத்து, ரசாயனம்
மற்றும் உரத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு புதிய ரோந்து கப்பலான ‘வரத்’தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

2,100 மெட்ரிக் டன் எடையும் 98 மீட்டர் நீளமும் கொண்ட இக்கப்பல், மணிக்கு
அதிகபட்சமாக 26 மைல் வேகத்தில் கடலில் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of