10 குழந்தைகளை தத்தெடுத்த ‘மக்கள் செல்வி’

342

தன்னுடைய அதிரடி நடிப்பினால் தமிழ் திரையிலகில் தன்னை முன்னணி கதாநாயகியாக நிலை நிறுத்திக்கொண்டவர் வரலட்சுமி சரத்குமார். தொடர்ந்து மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர், ஹீரோயின் மட்டுமில்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

அதோடு, முன்னணி நடிகைகள் பயப்படும் கதாபாத்திரமான வில்லி கேரக்டருக்கும் கச்சிதமாக பொருந்தி வருகிறார். இந்த நிலையில், இன்று தனது 34 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது இந்த பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், அவரது நடிப்பில் உருவாகி வரும் டேனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.இந்தப் படம் மூலம் வரலட்சுமிக்கு ‘மக்கள் செல்வி’ என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த நடிகைக்கும் பட்டம் வழங்கப்படாத நிலையில், முதல் முறையாக வரலட்சுமிக்கு மக்கள் செல்வி என்ற பட்டம் வழங்கப்பட்டது திரையுலகில் புதிய டிரெண்டாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சேவ் சக்தி என்ற அமைப்பை தொடங்கியுள்ள வரலட்சுமிக்கு இந்த பட்டம் கச்சிதமாக பொருந்தியுள்ளது.

அதோடு, சேவ் சக்தி அமைப்பில் உள்ள 25 உறுப்பினர்கள் அவரது பிறந்தநாளை முன்னிட்டு தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்துள்ளனர். மேலும், 10 குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.