அவருடன் அப்படி ஒன்றும் இல்லை – வரலட்சுமி சரத்குமார் அதிரடி

849

போடா போடி, தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சண்டக்கோழி 2 போன்ற படங்களில் நடித்து தற்போது தீபாவளி அன்று வெளிவர இருக்கும் “சர்கார்” படத்தில் விஜய்யுடன் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமார் அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருப்பதாவது:-

நடிகர் விஷால் தனக்கு நெருக்கமான நண்பர் என்றும் எல்லா வி‌ஷயங்களையும் இருவரும் பகிர்ந்து கொள்வோம் எனவும், ஆனால் அவரும் நானும் காதலிப்பதாகவோ, டேட்டிங் செல்வதாகவோ வரும் தகவல்களில் உண்மை இல்லை என்று தெரிவிதுள்ளார். மேலும் விஷாலுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்தால் நானே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க தயார் என்றார். அவர் திருமணம் செய்தால் மகிழ்ச்சியடையப் போவதும் நான் தான் என்ற அவர், எதற்காக விஷாலுடன் தன்னை இணைத்து பேசுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் அரசியலில் தனக்கு ஈடுபாடு உள்ளாதகவும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிறப்பான ஆளுமை மிக்க தலைவர் என்றும் தனியொரு பெண்மணியாக மொத்த மாநிலத்திலும் ஆளுமை செலுத்தினார் என்று பெருமை பேசிய அவர் இன்னும் 5 வருடங்களில், தான் அரசியலுக்கு வருவதாகவும் தன் தந்தை கட்சியில் சேர்ந்து அரசியலுக்கு வர மாட்டேன் என்ற அவர் எந்த கட்சியில் சேருவேன் என்பதை பிறகு தெரிவிக்கிறேன் என்று தெரிவித்தார்.

Advertisement