‘வரவேண்டிய நேரத்துல கரக்டா வருவேன்’ சூப்பர் ஸ்டார் பாணியில் வரலட்சுமி

179

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து ரூபாய்க்கு எளிய முறையில் நாப்கின் வழங்கும் இயந்திரத்தை முன்னணி நடிகையான வரலட்சுமி சரத்குமார் அறிமுகப்படுத்தினார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

” பள்ளி, கல்லூரிகளில் இதுபோன்ற நாப்கின்கள் கிடைக்கும் என்றால், ஏழை, எளிய மாணவிகளுக்கு மிகவும் பேருதவியாக இருக்கும். அதுமட்டுமின்றி, இளைஞர்கள் அணைவரும் அரசியலுக்கு வரவேண்டும்.அரசியல் என்பதை கெட்ட வார்த்தை போல் எல்லோரும் பார்க்கின்றனர். ஆனால் அது அப்படி இல்லை. தற்போது அரசியல் நாற்காலியில் கொடிகட்டி பறக்கும் அனைத்து அரசியல் தலைவர்களும் அந்த இடத்திற்கு அனுப்பியது நாம் தான்.

அந்த அதிகாரம் நம்மிடம் தான் இருக்கிறது. அதனால் தான் சொல்கின்றேன் இளைஞர்களால் அரசியலுக்கு வர முடியும். நான் அரசியலுக்கு வர வேண்டிய காலம் வந்தால் நிச்சயம் வருவேன்” என தெரிவித்தார்.