“வர்மா” படத்தில் புதிய குழப்பம்…, படக்குழுவினர் பற்றிய முழு தகவல்

665

தெலுங்கு திரையுலகில் மாபெரும் வசூல் சாதனையை தன்வசமாக்கிய “அர்ஜீன் ரெட்டி” படத்தை தமிழில் முதலில் பாலா இயக்கித்தில், விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடித்து வந்தார். படம் முடிவடைந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் வர்மா படத்தை கைவிடுவதாக அறிவித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு விறுவிறுப்பாக இல்லை என்றும், அர்ஜீன் ரெட்டி படத்தில் இருந்த உயிரோட்டம் வர்மா படத்தில் இல்லை என்றும் கூறியதுடன் இப்படத்தை வேறு ஒரு இயக்குனரை வைத்து எடுக்கப் போவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

இப்படத்தின் கதாநாயகனாக துருவ்வை தவிர, மற்ற நடிகர்- நடிகைகள் அனைவரையும் மாற்றப்போவதாகவும் தகவல் வெளியாகினர். இந்நிலையில், தற்போது இப்படத்திற்கு ஆதித்ய வரமா என்று தலைப்பு வைத்து படக்குழுவினர் பற்றிய விவரங்களையும் வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, இப்படத்தில் கதாநாயகியாக பனிதா சந்து, பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை கிரிசாயா இயக்கத்திலும், ரவி கே சந்திரன் ஒளிப்பதிவிலும், இ4 நிறுவனம் தயாரிக்கயுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of