கரையான் அரித்த வீட்டில் இருந்து IAS ஆனபெண் – குவியும் பாராட்டுக்கள்

1246

வயநாடு பகுதியில் கரையான் அரித்த வீட்டில் இருந்து ஆதிவாசி பெண் IAS ஆன மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் தொழுவண்ணா பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி கமலம். ஆதிவாசிகளான இவர்களது மகள் தன்யாஸ்ரீ (வயது 26).

கரையான் அரித்த ஓலை கூரை வீட்டில் வசித்தபோதும் தன்யாஸ்ரீக்கு கலெக்டர் ஆகவேண்டும் என்று தீராத தாகம் இருந்தது. கல்வியை நன்கு கற்றுவந்தார். மகளின் ஆர்வத்துக்கு பெற்றோர் உறுதுணையாக இருந்தனர்.

சிவில் சர்வீஸ் தேர்வு எழுத டெல்லி செல்ல வேண்டும். ஆனால் டெல்லி செல்ல பணம் இல்லை. தன்யாஸ்ரீயின் பெற்றோர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி டெல்லிக்கு அனுப்பி வைத்தனர்.

தேர்வு எழுதி விட்டு வந்த பின்னர் கூலிவேலை செய்து வந்தார் தன்யாஸ்ரீ. சமீபத்தில் மின்சாரம் தாக்கி தன்யாஸ்ரீ தூக்கி வீசப்பட்டார். இதில் அவரது இடது கை எலும்பு முறிந்தது.

இந்தநிலையில் சிவில் சர்வீல் தேர்வு முடிவு வெளியானது. இதில் தன்யாஸ்ரீ 410 ரேங்க் பெற்று வெற்றி பெற்றார். வயநாடு பகுதியில் ஆதிவாசி பெண் IAS ஆவது இதுவே முதல்முறை. இதனால் ஆதிவாசி மக்கள் தன்யாஸ்ரீயின் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of