திமுக சின்னத்தில் போட்டியிடும் விசிக? – திருமா விளக்கம்

349

தி.மு.க கூட்டணியில் நேற்றும் மட்டும் மூன்று கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. தி.மு.க கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸூக்கு 10 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

vck dmk

இந்நிலையில், நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும், ஐ.ஜே.க கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கதிர் அரிவாள் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட போவதாக ஐ.ஜே.கே கூறியுள்ளது. எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து ஒரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of