அதிமுக ஆட்சியில் மட்டும் தான் ஆணவக்கொலையா..? திருமாவின் பளார் பதில்!

555

சமீப காலமாக தமிழகத்தில் ஆணவக்கொலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சாதி மாறி திருமணம் செய்யும் காரணத்தால் பெற்றோர்களே தங்களது பிள்ளைகளை கொடூரமாக கொலை செய்து வருகின்றனர்.

ஆணவக்கொலைகள் அதிகரிப்பதற்கு சாதிய, மதவாத கட்சிகளே காரணம் என்று சமூக ஆர்வலர்ளும், அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியது பின்வருமாறு:-

“மத்திய அரசின் திட்டமானது மக்களுக்கு ஏற்புடையதாக உள்ளதா என்பதை கேட்டறிந்து அவற்றை அமல் படுத்த வேண்டுமே தவிர அவர்களிடத்தில் திணிக்கக்கூடாது.

அதிமுக ஆட்சியில் மட்டும்தான் ஆணவ படுகொலை நடைபெறுகிறது என்று குற்றச்சாட்டு கூறவில்லை. இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் தொடர்ந்து இது போன்று, நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில் இதை தடுப்பதற்குரிய முயற்சியை ஈடுபட வேண்டும் என்பது தான் கோரிக்கையாக உள்ளது. சாதிய, மதவாத கட்சிகளின் காரணங்களால் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of