என் உயிருக்கு ஆபத்து.., பாதுகாப்பு கேட்கும் திருமா

777

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதால் ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்குமாறு உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆனால், இவ்வழக்கை வழக்கமான நடைமுறைகளின்படி விசாரித்த ஐகோர்ட் தேர்தல் நடந்து முடிந்து விட்டதால் அந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டது.

இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன் தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதால் தேர்தல் பிரசாரத்தின்போது போலீஸ் பாதுகாப்பு அளிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் புதிய மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement