விசிக விற்கு மோதிரம் சின்னம் இல்லை – காரணம் இதுதான்

839

மோதிரம் சின்னத்தை தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.இதனால் மோதிரம் சின்னத்தில் ஏற்கனவே போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இம்முறை அந்த சின்னம் பறிபோயுள்ளது.

கடந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டது இந்த நிலையில் இந்த தேர்தலிலும் மோதிரம் சின்னத்தில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் மோதிரம் சின்னத்தை தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி வகிக்கும் திமுக வின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் களம் காணவாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.