புதிய பரிமாணத்தில் பாலிவுட்டில் களமிறங்கும் வேதிகா | Vedhika in Bollywood

307

தமிழில் மாதரசி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வேதிகா, முனி, காஞ்சனா, பாலாவின் பரதேசி உள்ள பல நல்ல திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடம் பிடித்த நடிகை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ள வேதிகா தற்போது பாலிவுட் படத்தில் அறிமுகம் ஆகிறார். மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள அந்த படத்துக்கு, தி பாடி என்று பெயரிடப்பட்டுள்ளது. பிணவறையில் இருந்து ஒரு சடலம் திடீரென்று காணாமல் போகிறது.

அதை தேடும் பணியில் போலீசார் ஈடுபடும்போது, பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளியாகிறது. எல் க்யூர்போ என்ற ஸ்பானிஷ் திரில்லர் படத்தின் ரீமேக்காக இந்தியில் உருவாகியுள்ள இந்த படத்தில் வேதிகா, இம்ரான் ஹாஸ்மி, ரிஷிகபூர், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர். வரும் டிசம்பர் 13ந் தேதி படம் ரிலீசாகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of