தமிழகம் முழுவதும்.. காய்கறி மார்க்கெட்டுகள் அடைப்பு.. – எப்போது..? ஏன்..?

911

தமிழகம் முழுவதும் பரவி கொரோனா வைரஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக, மாநிலம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால், சென்னை கோயம்பேடு மார்கெட்டையும் அரசு மூடி வைத்துள்ளது.

இதற்கிடையே கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தி வரும் 10 ஆம்தேதி தமிழகம் முழுவதும் காய்கறி மார்க்கெட்கள் அடைக்கப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.

காய்கறி கடைகளுடன், பழக்கடைகளும், பூக்கடைகளும் அடைக்கப்படும் என்று  விக்கிரமராஜா கூறியுள்ளார்.

இந்நிலையில்,சென்னை கோயம்பேடு மண்டலத்தில் கொரோனா பாதிப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், கொரோனா பாதிப்பு குறைந்தவுடன் கோயம்பேடு மார்க்கெட் திறக்கப்படும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் கூறினார்.

Advertisement