குடியரசு தினவிழாவில் தமிழகத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வாகனங்கள்..!

462

டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில், தமிழகத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அலங்கார வாகனங்களின் அணிவகுப்பு நடைபெறுகிறது.

குடியரசு தினம் வரும் 26ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தன்று, டெல்லி ராஜபாதையில் முப்படையினர், துணை ராணுவத்தினர், தேசிய மாணவர் படையினர் அணிவகுப்பு நடைபெற உள்ளது.

மேலும், அந்தந்த மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதி பலிக்கும் வகையிலான வாகன அணிவகுப்பும் நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் கலாச்சாரத்தை பறைசாற்றும் கரகாட்டம், தப்பாட்டம் போன்றவைகளுடன், அலங்கார அணி வகுப்பில் இடம்பெறுகின்றன.

Advertisement