வேலூர் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு…!

325

வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த மக்களவை தேர்தலின் போது அதிகமாக பணப்பட்டுவாடா நடைபெற்றதாக கூறி வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டட்து. இந்த நிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி  வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 11ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி வரும் 18 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை  19ல் வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறும் எனவும்,வரும் 22ம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் ஆக.9ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of