வேலூர் திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

734

வேலூர் திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் அனைத்து கட்சிக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களை நம்பாமல் பணத்தை மட்டுமே நம்பி திமுக தேர்தலில் களமிறங்கியுள்ளது என்றும் 2 ஜி ஊழலில் கொள்ளையடித்த பணத்தை தி.மு.க.வினர் தேர்தலில் செலவு செய்து வருவதாகவும் தெரிவித்தார். வேலூர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் துரைமுருகனுக்கு சொந்தமானது என்று தெரிய வந்துள்ளதால், வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of