வேலூரில் தேர்தல் ரத்தாகிறதா? – தேர்தல் ஆணையம் விளக்கம்

563

வேலூரில் அதிக அளவிலான பணம் கைப்பற்றப்பட்டதாக மாநில தேர்தல் ஆணையத்திடம் இருந்து அறிக்கையை அடுத்து, வேலூரில் தேர்தலை நிறுத்துமாறு குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்து உள்ளதாக வெளியான தகவலை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

வேலூர் மக்களவை தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனை ஒரு குடவுனில் இருந்து 11.5 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.

திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து இந்த பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வேலூர் மக்களவை தொகுதியில் அதிக அளவிலான பணம் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்பி உள்ளார்.

இதனால் வேலூரில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்து உள்ளதாக தகவல் வெளியானது.

இதனால் வேலூரில் தேர்தல் நடக்குமா இல்லையா என்பது குறித்து பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ஊடகங்களில் வெளியான தகவல்களை மறுத்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், வேலூரில் தேர்தலை நிறுத்துவது தொடர்பாக இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளது.

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மற்றும் அதிமுக கூட்டணி சார்பாக புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் உள்பட பலர் போட்டியிடுகின்றனர்.

 

Advertisement