“ஒரு தொகுதி.., அந்த ஒரே ஒரு தொகுதி தான்..,!” ஜெஸ்ட் மிஸ்சில் தப்பித்த திமுக..!

658

வேலூர் மக்களை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதியில் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் தலா மூன்று தொகுதிகளில் முன்னிலை பெற்றன. குடியாத்தத்தில் அதிமுக 94178 வாக்குளும், திமுக 82887 வாக்களும் பெற்றன.

இங்கு அ.தி.மு.க 11291 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது. அணைக்கட்டில் அதிமுக 88770 வாக்குகளும், திமுக 79231 வாக்குகளும் பெற்றன. இந்த தொகுதியில் தி.மு.க-வை விட அ.தி.மு.க 9539 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது.

கேவி குப்பத்தில் அதிமுக 80100 வாக்குகளும், திமுக 71991 வாக்குகளும் பெற்றுள்ளன. இங்கு அ.தி.மு.க 8109 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது. வேலூரில் தி.மு.க 78901 வாக்குகளும், அதிமுக 72626 வாக்குகளும், பெற்றுள்ளன. இந்த தொகுதியில் திமுக 6374 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது.

ஆம்பூரில் திமுக 79371 வாக்குகளும், அதிமுக 70768 வாக்குகளும் பெற்றுள்ளன. இங்கு தி.மு.க 8603 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகளை திருப்பிபோட்ட வாணியம்பாடி தொகுதியில், திமுக 92599 வாக்குகளும், அதிமுக 70248 வாக்குகளும் பெற்றன.

இந்த தொகுதியில் தி.மு.க கூடுதலாக பெற்ற 22311 வாக்குகளே தி.மு.க வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாட்டில், தி.மு.க கூட்டணியின் எம்.பிக்கள் பலம் 38ஆக அதிகரித்துள்ள நிலையில், மக்களவையில் தி.மு.க-வின் பலம் 24ஆக உயர்ந்துள்ளது.

Advertisement