“பிரியாணி கடை ஞாபகம் இருக்கா…திருநெல்வேலி அல்வாவா…டெல்லி அல்வாவா..?” – முதல்வர் – ஸ்டாலின் டிஷ்யூம் பேச்சு..

401

திருநெல்வேலி அல்வாவா? – டெல்லி அல்வாவா? – விளாசித்தள்ளிய ஸ்டாலின்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இன்று வேலூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வெவ்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர்கள், மாறி மாறி கடுமையாக விமர்சித்து கொண்டனர்.

இதில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுகவினர் சரியாக இருந்தால் தமிழகத்தில் ஒரு கொலை கொள்ளை சம்பவம் கூட நடக்காது. எல்லா தொலைக்காட்சிலையும் பார்த்திருப்பீங்க’’ ஒரு பிரியாணி கடையில நல்லா மூக்கு பிடிக்க திண்ணுட்டு காசு கேட்டா மூக்குலேயே குத்துறான்.

இது தாங்க திமுக வோட வேல” மறுநாளே அந்த கடைக்கி ஸ்டாலின் போயி கட்டப்பஞ்சாயத்து பண்ணி வைக்கிறாரு.. அவரு திமுக தலைவர் இல்ல.. கட்டப்பஞ்சாயத்து தலைவர் என கடுமையாக சாடினார்.

மு.க.ஸ்டாலின் பேச்சு :

மக்களவை தேர்தலில் திமுக மிட்டாய் கொடுத்து ஏமாற்றி வெற்றி பெற்றுவிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் பேசினார். இது தமிழக மக்களை அவமானப்படுத்தும் செயல். சரி.. உங்களது வாதத்திற்கே வருகிறேன்.. 

நாங்கள் மிட்டாய் கொடுத்து வெற்றி பெற்றோம் என்று கூறினால், நீங்கள் தேனியில் ஓபிஎஸ் மகனை வெற்றிபெற வைத்தீர்களே! அது என்ன அல்வா கொடுத்து வெற்றி பெற்றீர்களா? திருநெல்வேலி அல்வாவா.. இல்ல டெல்லி அல்வாவா..

பல்வேறு நாடகமாடி வேலூர் தேர்தலை நிறுத்தினார்களே..! பல்வேறு அபாண்டமான பழிகளை துரைமுருகன் மீதும் அவரது மகன் மீதும் சொன்னார்களே..! ஆனால் வரும் 5 ஆம் தேதி திமுக வெற்றி பெறுவதை எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது. என பேசினார்.

முதல்வர் பேச்சும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரின் பேச்சும் வேலூர் தேர்தல் களத்தை சூடுபிடிக்க செய்தது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of