“அய்யய்யோ.. என் மனைவி கிணத்துல விழுந்துட்டா..” காப்பாத்துங்க.. – அலறி கொண்டு எஸ்கேப் ஆன சென்றாயன்..!

798

“என் பொண்டாட்டி கிணத்துல விழுந்துட்டா.. காப்பாத்துங்க” என்று ஊரெல்லாம் அலறி கொண்டு ஓடினார் புதுமாப்பிள்ளை சென்றாயன்! இப்போது அவரைதான் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மிட்டூர் மல்லாண்டபட்டி பகுதியை சேர்ந்தவர் சென்றாயன். 25 வயதாகிறது. 5 மாசத்துக்கு முன்னாடிதான், வரலட்சுமி என்ற 19 வயது பெண்ணை வீட்டில் கல்யாணம் செய்து வைத்தனர்.

மிட்டூர் பகுதியில் உள்ள விவசாய தென்னந்தோப்பு ஒன்றில் சென்றாயன் கூலி வேலை பார்த்து வந்தார். அதனால் அந்த அடர்ந்த தென்னந்தோப்பிலேயே குடிசை ஒன்றினை போட்டு கொண்டு வசித்து வந்துள்ளார்.

கல்யாணம் ஆகி ஓரிரு மாதங்கள்தான் ஆகியிருக்கும்.சென்றாயன் வரதட்சணை பிரச்சனையை கிளப்பினார்.

ராத்திரி நேரம் ஆகிவிட்டால் தண்ணியை போட்டுவிட்டு வந்து ரகளை செய்வதும் வாடிக்கையானது. இதுபோக, வரலட்சுமி வீட்டில் சீதனமாக போட்டு விட்ட நகைகளையும் அடமானம் வைத்து ஊர் சுற்றி வந்தார். இதனால் தம்பதிக்குள் சண்டை வந்துவிட்டது.

கூலி வேலை செய்து வரும் தன் பெற்றோரிடம் வரலட்சுமி நிறைய முறை இதை பற்றி சொல்லி அழுதுள்ளார். கல்யாணத்துக்கு முன்பு எனக்கு எந்த நகையும் வேணாம், பொண்ணை மட்டும் அனுப்பினால் போதும் என்று சொன்னாராம் சென்றாயன்.

இப்போதோ நகை கேட்டு தகராறு செய்யவும், சமரச பேச்சுவார்த்தை பல முறை நடந்தது. நேற்றும்கூட, மதுபோதையில் வந்து வரலட்சுமியை தாக்கி உள்ளார். இதில் வரலட்சுமி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதை பார்த்து பதறிய சென்றாயன், பக்கத்தில் இருந்த கிணற்றில் வரலட்சுமியின் சடலத்தை தூக்கி வீசிவிட்டு, ஊருக்குள் பதறியடித்து கொண்டு ஓடினார். “என் பொண்டாட்டி கிணத்துல விழுந்துட்டா.. வந்து காப்பாத்துங்க” என்று சொல்லி உள்ளார்.

இதை உண்மை என்று நம்பிய ஊர்மக்களும் வரலட்சுமியின் சடலத்தை மீட்டு, 2 கிலோமீட்டரில் உள்ள அவருடைய சொந்த வீட்டிற்கு எடுத்துச்சென்று எரிக்கவும் முயன்றுள்ளனர்.

விஷயம் கேள்விப்பட்டு வரலட்சுமியின் தாய், மற்றும் உறவினர்கள் வந்து பார்த்தபோது, சடலத்தை கண்டு அதிர்ந்தனர். இது குறித்து திருப்பத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

திருப்பத்தூர் சார் ஆட்சியாளர் பிரியங்கா பங்கஜம் இதில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். ஆனால் புதுமாப்பிள்ளை சென்றாயனை காணவில்லை. எங்கே மாயமானார் என்று தெரியாமல் போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of