வேலூர் சிறையிலிருந்து பரோலில் வெளியே வந்த பேரறிவாளன்..!

110

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிறைவாசம் அனுபவித்துவரும் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.அதாவது தந்தையின் உடல்நலம்,அக்கா மகள் திருமணம் உள்ளிட்ட காரணங்களால் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார்.

மேலும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 30 நாட்கள் பரோல் வாங்க வேண்டும் என்பதன் அடிப்படையிலும் பரோல் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.