2023-ம் ஆண்டுக்குள் குடிசை இல்லா மாநிலமாக மாறும் – ஓ.பன்னீர்செல்வம்

245

வேலூர் மக்களவை தொகுதியில் வருகிற ஆகஸ்ட் 5ந்தேதி வாக்கு பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 9ந்தேதி நடைபெறும். வேலூர் மக்களவை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி. சண்முகம் தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.  இதனால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு வேலூர் ஒடுகத்தூரில் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.  அவர் பேசும்பொழுது இந்த முறை இரு பருவமழைகளும் பொய்த்துள்ளது.  ஆனாலும் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது.

100 நாள் வேலை திட்டத்தை ஒருபோதும் நிறுத்த மாட்டோம்.  வேலூர் ஒடுகத்தூர் பேருந்து நிலையம் நவீனமயமாக்கப்படும் என கூறினார்.

இதேபோன்று வேலூர் லத்தேரியில் பொதுமக்களிடையே அவர் பேசும்பொழுது வருகிற 2023ம் ஆண்டுக்குள் தமிழகம் குடிசை இல்லா மாநிலமாக மாறும்.  பொதுமக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என்றும் கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of