வேலூர் தொகுதி – பன்னிரெண்டாம் சுற்று முன்னிலை நிலவரம்

610

வேலூர் தொகுதிகான வாக்குபதிவு எண்ணிக்கையில்  சுற்று முன்னிலை நிலவரம்.

மொத்தம் 71.51 சதவீத வாக்குகள் .அதில் 1432,555 மொத்த வாக்களர்கள் அதில் 10,23,352பேர் தான் தனது வாக்குகளை பதிவிட்டனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.

அதன்பின் இயந்திர வாக்குப்பதிவு எண்ணப்பட்டது. அதில் துவக்கத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அதிக வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றார்.

அதன் பின் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெறத்தொடங்கினார். இரண்டு வேட்பாளர் இடையே கடும் போட்டி நடைபெற்றது. இரண்டு சுற்றுக்கு பின்பு நான்காம் சுற்றில் அதிமுக மீண்டும் முன்னிலை பெற்று வந்தது.

அதில் அதிமுக ஏ.சி.சண்முகம் 9,032 வாக்குகளும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 94,873 வாக்குகள் பெற்றுள்ளனர். அதனை தொடர்ந்து ஐந்தாம் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற தொடங்கியது.

அதில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் ஐந்தாம் மற்றும் ஆறாம் சுற்றில் அதிமுக முன்னிலை பெற்று வந்தது. அதில்11220வாக்குகள் வித்தியாசத்தில் அதிகமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.அதில் அதிமுக வேட்பாளர்1,78,138 வாக்குகளும் திமுக வேட்பாளர்1,66,918 வாக்குகளும் பெற்று அதிமுக வேட்பாளர் ஆறாம் சுற்று முடிவில் முன்னிலையில் பெற்றார்.

மேலும் ஏழாம் மற்றும் எட்டாம் சுற்றில் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்று வருகின்றன. ஏ.சி.சண்முகம் 2,12,875 வாக்குகளும் திமுக வேட்பாளர் 2,02,066 வாக்குகளும் பெற்றனர் அதிமுக10809 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை இடத்தில் உள்ளது.

அதனை தொடந்து எண்ணப்பட்ட ஒன்பதாம் மற்றும் பத்தாம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 2,64,140 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் சண்முகம் 2,56,633 வாக்குகளும் பெற்றனர்.பத்தாம் சுற்றின் முடிவில் திமுக 2,64,140 வாக்குகள் பெற்று திமுக முன்னிலையில் இருந்தது.

அதனை தொடர்ந்து பதினொன்றாம் மற்றும் பன்னிரெண்டாம் சுற்று எண்ணப்பட்டது அதிலும் திமுக தொடர் முன்னிலையில் இருந்தது அதில் திமுக 3.07,691 வாக்குகளும் அதிமுக 2,97,855 வாக்குகளும் பெற்றனர் அதில் அதிமுக தொடர் பின்னடைவு அடைந்துள்ளது திமுக தொடர் முன்னிலையில் உள்ளது. தனது வெற்றி யாருக்கு என்பது கடும் போட்டியாக உள்ளது.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of