வேலூரில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் – கமல்

228

சென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கமல்.

தேர்தல் பிரசாரத்துக்குச் செல்லும்போது மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அந்த மாற்றத்தை மக்கள் எங்கள் மூலம் எதிர்பார்க்கின்றனர். அதனால் எங்களுக்குப் பொறுப்பும் கடமையும் கூடியுள்ளது.

பறக்கும் படை அதிகாரிகளால் கோடிக்கணக்கில் பணம் பிடிக்கப்பட்டு வருகிறது.இந்தச் செய்தியைத் தினமும் கேட்கிறோம். இது போன்ற செய்திகளைப் பார்த்துவிட்டு எங்கள் கட்சியினர்கூட செலவு செய்ய வேண்டும் என்று சொல்கின்றனர்.

அவர்களுக்கு கனிவாகச் சொல்கிறேன். அப்படிச் செய்யக்கூடாது. ஒருவேளை என் கட்சியினர் யாராவது அப்படிச் செய்தால், அவர்களை தேர்தல் ஆணையத்தில் நானே காட்டிக் கொடுப்பேன் என்று மிரட்ட வேண்டியுள்ளது. திராவிடம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. திராவிடம் என்பது ஒரு இனம்.

நான் திராவிடன் நாம் எல்லோரும் திராவிடர்கள். ஆனால் இரு கட்சிகள் தங்களுக்கு என்று பகிர்ந்து எடுத்துக்கொண்ட விஷயங்கள் திராவிடம் அல்ல. அதேசமயம் திராவிடக் கட்சிகளில் உள்ள நல்ல திட்டங்களை நாங்கள் எடுத்துக் கொள்வோம்.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களிடம்தான் தேர்தல் ஆணையம் பறக்கும் படை வருமான வரி துறையினர் சோதனை மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக செயல்படக்கூடாது.

டி.என்.சேஷன் போல தேர்தல் ஆணையம் இன்னும் அழுத்தமாகச் செயல்பட வேண்டும் என்பதுதான் எங்கள் வேண்டுகோள்.
ரஜினி என்னிடத்தில் பேசும்போது எனக்கு ஆதரவு தருவதாகச் சொன்னார். எனக்கு ஆதரவு தரக்கோரி திருப்பி திருப்பி அவரிடம் வலியுறுத்த முடியாது.

எனக்கு ஆதரவாக ரஜினி பிரசாரம் செய்வாரா என்று தெரியாது. பிரசாரம் செய்தால் சந்தோஷம்தான். வேலூரில் திமுக பிரமுகர் குடோனில் பதுக்கி வைத்திருந்த பணம் குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். அந்த இடத்திலாவது தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றார் கமல்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of