“என் அம்மாகிட்ட பேசாத”.. சொன்னதை கேட்காத நபர்.. சிறுவனின் செயலால் மிரண்ட போலீஸ்..!

690

வேலூர் சத்துவாச்சாரி, வ.உ.சி நகர் மலையடிவாரப் பகுதியைச் சேர்ந்தவர் ரகு (52). பீடித் தொழிலாளி.

நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணியளவில் வீட்டருகே இருந்த ரகுவை, அங்கு மறைந்திருந்த மர்ம நபர் அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொன்றுவிட்டு தப்பினான்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, சத்துவாச்சாரி போலீஸார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

ரகுவின் மகன் தனசேகர் (29) பலரிடம் கடன் வாங்கிவிட்டுத் தராமல் இருந்தார். பைனான்ஸியர்கள் அடிக்கடி ரகுவின் வீட்டுக்கு வந்து, அசல் வட்டியைக் கேட்டுச் சத்தம் போட்டுள்ளனர்.

சம்பவத்தன்றும், ஐந்தாயிரம் ரூபாய் கடனுக்காக பைனான்ஸியர் ஒருவர் தகராறு செய்துள்ளார். அதைத்தொடர்ந்து, கொலை நடந்திருப்பதால், மகன் வாங்கிய கடனுக்காக தந்தை கொல்லப்பட்டாரா? என்று சந்தேகம் எழுந்தது.

கடைசியாக வீட்டுக்கு வந்து சென்ற பைனான்ஸியரைப் பிடித்து போலீஸார் கிடுக்கிப்பிடியாக விசாரித்தனர். கொலையில் அவருக்குத் தொடர்பில்லை எனத் தெரியவந்தது.

பின்னரே, அதே பகுதியில் வசிக்கும் சங்கீதா என்ற பெண்ணுடன் ரகுவுக்குத் தவறான தொடர்பிருந்தது தெரியவந்தது. சங்கீதா ஏற்கெனவே திருமணம் ஆனவர். பாபு என்ற கணவனும், 19 வயதில் விஜய் என்ற ஒரே மகனும் உள்ளனர்.

சிறுவன் விஜய் வாக்குமூலம்அப்பா பிரிந்து போனதுக்கும், எங்கள் குடும்பம் சிதைந்து போனதுக்கும் ரகுதான் காரணம்.

மனைவியின் தவறான தொடர்பால், ஆத்திரமடைந்த பாபு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சங்கீதாவைப் பிரிந்து சென்றுவிட்டார். மகனுடன் வசித்துவந்த சங்கீதா, ரகுவுடன் மேலும் நெருக்கமானார்.

தண்ணீர் கேன் போடும் வேலை செய்த சிறுவன் விஜய்க்குத் தாயின் நடத்தை பிடிக்கவில்லை. தாயைக் கண்டித்த அந்தச் சிறுவன், தன் வீட்டுக்குத் தினந்தோறும் வந்துசென்ற ரகுவிடமும் தகராறு செய்துள்ளான்.

`என் அம்மாவுடன் இனிமேல் நீ பேசக்கூடாது; என் வீட்டு பக்கமே வரக்கூடாது’ என்று ரகுவை எச்சரித்துள்ளான் சிறுவன் விஜய். பதிலுக்கு அவரை, மிரட்டும் தொனியில் ரகு கண்டித்துள்ளார்.

இந்த விவகாரத்தால் ரகு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சிறுவன் விஜய்யைப் பிடித்துபோலீஸார் விசாரித்தனர். ரகுவைக் கொன்றதை அவன் ஒப்புக்கொண்டான்.
“என் தாயுடன் ரகு தவறான தொடர்பு வைத்திருந்தார். அப்பா பிரிந்து போனதுக்கும், எங்கள் குடும்பம் சிதைந்து போனதுக்கும் ரகுதான் காரணம். ஊரில் எல்லோரும் என் அம்மாவை அசிங்கமாகப் பேசினார்கள்.

எனக்கு அவமானமாக இருந்தது. ரகுவிடம் பலமுறை சொன்னேன். அவர் கேட்காததால் கொன்றுவிட்டேன்” என்று வாக்குமூலம் கொடுத்திருப்பதாக போலீஸார் கூறுகிறார்கள். இதையடுத்து, சிறுவன் விஜய் கைது செய்யப்பட்டான்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of