தண்டவாள விரிசலால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்

326

வேலூர் அருகே தண்டவாள விரிசலால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த அன்வார்திகான்பேட்டை மற்றும் மகேந்திரவாடி தடவாளத்திற்கு இடையே தண்டவாளத்தில் ஏற்பட்டது.

இதனால் சென்னையில் இருந்து காட்பாடி மார்க்கமாக செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

தகவல் அறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள் தண்டவாள விரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தண்டவாள விரிசல் காரணமாக அவ்வழியாக செல்லும் கெளகாத்தி விரைவு ரயில், எஸ்வந்த்பூர் விரைவு ரயில், கோவை விரைவு ரயில், பெங்களூரு செல்லும் ரயில்கள் உள்ளிட்ட ரயில்கள், தண்டவாளத்தை தற்காலிகமாக இணைத்த பின்னர் ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக இயக்கப்பட்டன.

இதனையடுத்து தற்காலிகமாக இணைப்பை முழுவதுமாக சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of