என் வயது 2,16,668! வேலூர் மக்களவை தேர்தலின் வேட்புமனுவின் போது ரகளை!

531

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்களவை தேர்தல் நடைபெற்றது. வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும், தேர்தல் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது வேலூர் மக்களவை தொகுதிக்கும் தேர்தல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று பலரும் வேட்புமனுக்கள் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். வேட்புமனுவிற்கான முதல் நாளிலே பலரும் பலவிதமாக வந்து, ஆட்சியர் அலுவலகத்தையே அலர வைத்துவிட்டனர்.

கலெக்டர் அலுவலகத்துக்குள் ஒருவர் இரண்டு கைகளையும் விரித்துக்கொண்டு பின்னோக்கியே வேகவேகமாக நடந்துவந்தார். அவர் அணிந்திருந்த உடை திகில் திரைப்படங்களில் ஆவிகள் அணிவதைப் போல் இருந்தது.

போலீஸார் மிரண்டுபோயி, அவரைத் தடுத்துநிறுத்தி விசாரித்தனர். அதற்கு அவர், “என்னுடைய பெயர் மனிதன். வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அக்ராகரம் கிராமத்தைச் சேர்ந்தவன். கடந்த 38 ஆண்டுகளாகப் பின்னோக்கிதான் நடக்கிறேன். உலக அமைதிக்காக 16 ஆண்டுகளாகப் பேசாமல் இருந்தேன்.

பிரதமர் பதவிக்காக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட நேரத்தில்தான் மீண்டும் பேசத்தொடங்கினேன். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வயது 2,16,668 ஆகிறது. நான் பிரதமர் ஆன பிறகுதான் முன்னோக்கி நடப்பேன். இப்போது, நான் வேலூர் தேர்தலில் போட்டியிடுகிறேன். நிச்சயம் வெற்றிபெறுவேன்” என்றார்.

இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இவரைப் போன்று பலரும் வித்தியசமான முறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of