பயங்கரவாதம் என்பது மனித நேயம், அமைதி, வளர்ச்சியின் பொதுவான எதிரி – குடியுரசுத் துணை தலைவர்

154

பயங்கரவாதம் என்பது மனித நேயம், அமைதி, வளர்ச்சியின் பொதுவான எதிரி என குடியுரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற ரோட்டரி இண்டர் நேஷனலின் நூற்றாண்டு விழாவில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் துணை தலைவர்வெங்கையா நாயுடு கலந்துகொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், பயங்கரவாத அச்சுறுத்தலை கட்டுப்படுத்த அனைவரும் உழைக்க வேண்டும் என்றும், பயங்கரவாதம் மனித நேயத்திற்கு பொதுவான எதிரி எனவும் தெரிவித்தார்.

மேலும் போலியோ ஒழிப்பு கல்வி, மற்றும் சுகாதார சேவைகள் துறையில் ரோட்டரி இன்டர்நேஷனல் செய்து வரும் பணிகளை குடியரசுத் துணை தலைவர் பாராட்டினார். இதில் மேற்கு வங்க மாநில ஆளுநர் மற்றும் மாநில தொழில்நுட்ப அமைச்சர் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of