மோசடி மன்னன் விஜய் மல்லையா நாடு கடத்தப்படுவாரா?

410

வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் பெற்று லண்டனில் தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லயாவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.

இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் பல்வேறு தனியார் வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார்.

அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறபிக்கப்பட்டு உள்ளன.

இந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தொடர்பாக இந்திய அரசு லண்டன் வெஸ்ட்மின்ஸ்ட்டர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் இன்று இறுதிகட்ட விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்படும் எனவும், இன்றய தீர்ப்பு இந்திய அரசுக்கு சாதகமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்திய அரசின் பொருளாதார அமலாக்கத்துறை உயரதிகாரிகள் மற்றும் சி.பி.ஐ. உயரதிகரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவினர் சி.பி.ஐ. கூடுதல் இயக்குனர் சாய் மனோகர் தலைமையில் லண்டன் சென்றடைந்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of