பாலா இயக்கும் வர்மா திரைபடத்தை கைவிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

306

தெலுங்கில் அறிமுக படத்தின் மூலம் தனக்கென என்றும் அழியாத ரசிகர் பட்டாலத்தை உருவாக்கிய விஜய் தேவேரகுண்டா. அவரின் முதல் படமான அர்ஜூன் ரெட்டி படத்தை தமிழில் பாலா இயக்கி வந்தார்.

இப்படத்தின் மூலம் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாக இருந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை கைவிடுவதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் சிங்கில் ட்ராகும், சில காட்சிகளும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இது போன்ற தகவல் வெளியாகியுருப்பது விக்ரமின் மகனுக்கு மட்டும் இல்லாமல் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.