மிக வேகமாக உருகும் பனிக்கட்டி – நாசா எச்சரிக்கை

434

கிரீன்லாந்து தீவில் பனிக்கட்டி உருகும் வேகம் மிக அதிகமாக இருப்பதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த மாதம் ஐரோப்பிய நாடுகளில் வெப்பநிலை அதிகரித்ததால் பனிப்பிரதேசம்  அதிகம் உள்ள நாடுகளில் வசிக்கும் மக்கள் கூட வெப்பத்தின் தாக்கத்தினால் பெரிதும் அவதிக்கு உள்ளாயினர்.

இந்நிலையில், பருவநிலை மாறுபாடு காரணமாக உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்தில் பனிப்பாறைகள் வழக்கத்திற்கு மாறாக உருகி வருகிறது. கடந்த 2ம் தேதி ஒரே நாளில் மட்டும் 12 புள்ளி 5 பில்லியன் டன் அளவிற்கு பனிப்பாறை உருகியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குலுசுக் என்ற இடத்தில் நாசா விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் கிரீன்லாந்தில் பனிப்பாறைகள் உருகும் வேகம் மிக வேகமாக இருப்பதாகவும், அதன் தாக்கம் மிக மோசமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். கடந்த வாரத்தில் பனிக்கட்டிகளும், பனிப்பாறைகளாகவும் காணப்பட்ட இடம் தற்போது நீராக மாறியிருப்பது மோசமான சூழ்நிலையைக் குறிப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of