4 இயக்குநர்கள் சேர்ந்து இயக்கும் ஒரு படம்..!

672

நெட்ப்பிளிக்ஸ் போன்றவற்றை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை, தற்போதுள்ள சூழ்நிலையில் அதிகரித்து வருகின்றது. இந்த இணையதள ஊடகத்தில், முக்கிய இயக்குநர்கள் படங்களை தற்போது இயக்க ஆரம்பித்துள்ளனர்.

பாலிவுட்டின் முக்கிய இயக்குநர்களான, அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், கரன் ஜோகர், திபாகர் ஜானர்ஜி ஆகியோர் இணைந்து லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற படத்தை இயக்கி நெட்ப்பிளிக்ஸில் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் தமிழில் இதேபோன்ற முக்கிய இயக்குநர்கள் இயக்க ஒரு படம் வெளியாக இருக்கிறது. ஆந்தலாஜியாக உருவாக இருக்கும் இந்த படத்தில், வெற்றிமாறன், கௌதம் மேனன், சுதா கொங்காரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் இயக்குநர்களாக பணியாற்ற உள்ளனர்.

தற்போது, அவரவர் படங்களின் பணிகளில் பிஸியாக இருக்கின்றனர். இந்தப் படத்திற்காக 25 சதவிகித வேலைகளைப் பார்த்தால் போதுமென்பதால், அவரவருக்கு கிடைக்கும் நேரங்களில் பணியாற்ற இருக்கின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of