பால்தாக்கரே இறந்த போது அரசு பேருந்தை சேதப்படுத்திய  இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை

538

பால்தாக்கரே மரணத்தின் போது தமிழகத்தில் அரசுப் பேருந்தை சேதப்படுத்திய சிவசேனா கட்சியை சேர்ந்த இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிவசேனா கட்சியின் தலைவராக இருந்த பால்தாக்கரே கடந்த 2012ஆம் ஆண்டு காலமானார். அவர் இறந்த போது திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே சிவசேனா கட்சியை சேர்ந்த இருவர் அரசு பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். இதுதொடர்பாக சிவசேனா கட்சியை மகேஷ்குமார், மகேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் நீதிமன்றம் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of