செயலி மூலம் குவியும் புகார்கள்.

134

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இந்நிலையில் தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு
பறக்கும் படை தங்களது சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 5 நாட்களில் மொத்தம் ரூ.4 கோடியை 86 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 73 லட்சம் ரூபாய் அதிகாரிகளின் சோதனையில் சிக்கியுள்ளது.

தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவர்கள் பற்றி பொதுமக்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம். இதற்காக தனி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி பற்றி அறிந்ததும் ஏராளமான பொது மக்கள் தங்கள் பகுதியில் உள்ள தேர்தல் விதிமீறல்களை வீடியோவில் படம் எடுத்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுவரை 297 பேர் வீடியோ மூலம் தேர்தல் புகார்களை அளித்துள்ளனர்.

அந்த புகார்களில் 38 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 81 புகார்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தேர்தல் விதிமீறல்களை தைரியமாக வீடியோ மூலம் படம் எடுத்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கலாம்.