“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video

2377

‘Porcupine’ தமிழில் முள்ளம்பன்றி என்றழைக்கப்படும் அழகிய குட்டியான முகம் கொண்ட மிருகம், இருந்தாலும் இந்த மிருகத்தின் உடல் முழுதும் குத்தும் முற்களால் நிறைந்திருக்கும், தன்னை தாக்க வரும் மிருகங்களிடம் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ளவே முள்ளம்பன்றி தனது உடம்பில் உள்ள அந்த முற்களை பயன்படுத்தும். இந்தோனேசியாவில் இந்த முள்ளம்பன்றிகள் பலி பொருட்களாக பார்க்கப்படுகின்றன.

விழாக்களின் போது இந்தோனேசிவில் இந்த முள்ளம்பன்றிகளை பலி கொடுத்து பின்னர் சமைத்து உண்ணும் வழக்கத்தை கொண்டுள்ளனர். இவை ஒரு பக்கம் இருக்க முள்ளம்பன்றி ஒன்று ஒரு சிறுவனிடம் நட்பு பாராட்டும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோவில் ஒரு சிறுவன் சாலையில் நடந்து செல்லும் போதும் அவனை பின் தொடர்ந்து அவன் போகும் திசையெல்லாம் அவனோடு ஒரு முள்ளம்பன்றியும் செல்கிறது. இந்திய வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement