வைரல் ஆனா வாக்களிக்கும் வீடியோ ! 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

459

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மராட்டிய மாநிலம் உஸ்மானாபாத் தொகுதியில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது.

வாக்குச்சாவடியில் ஒருவர், தான் ஓட்டு போடுவதை வீடியோ எடுத்தார். அப்போது, தேசியவாத காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள் என்று பேசினார்.

மேலும் அந்த வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டார். அவர் வெளியிட்ட சற்று நேரத்தில் அது ‘வைரல்’ ஆனது. அந்த நபர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார்.

இந்நிலையில் தேர்தல் அதிகாரி கவனத்துக்கு இச்சம்பவம் தெரிய வந்ததும், அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இச்செயல், தேர்தல் விதிமீறல் என்பதால், அவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த விடியோவும் பேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of