நடக்கும் ஆனா நடக்காது? விக்னேஷ் சிவனுக்கு அறிவுரை கூறிய ரசிகர்கள்

475

2019-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ‘கிரீன் புக்’, ‘ரோமா’, ‘பிளாக் பாந்தர்’ ஆகிய திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுகளை அள்ளின. இந்த நிலையில் தமிழ் சினிமா இயக்குனரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் தனது ஆஸ்கர் கனவை வெளியிட்டு இருக்கிறார்.

ஆஸ்கர் விருது அரங்கிற்குள் செல்வதற்கான கதவு அருகே நின்றபடி ஒரு படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் விக்னேஷ் சிவன், தனக்கும் ஒருநாள் ஆஸ்கர் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிடும்போது, ‘எனக்கும் ஒருநாள் கதவு திறக்கும், அருகில் இருப்பதே நமது வேலை’ என்று தெரிவித்துள்ளார். ஆஸ்கர் விருது பெற்ற கலைஞர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவனின் கனவு பலிக்க ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் அதே வேளையில் ஆஸ்கர் வேண்டுமென்றால் நீங்கள் ஆலிவுட் படம் இயக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளனர்.

Advertisement