விக்னேஷ் சிவனுடன் இணைந்து நயன்தாரா கொடுத்த அதிரடி சர்ப்ரைஸ்..!

405

நீண்ட நாட்களுக்கு பிறகு விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா தனது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

நயன்தாரா நடிக்கும் 65-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.ரஜினி நடித்த நெற்றிக்கண் படத் தலைப்பின் உரிமையை வாங்கியுள்ள விக்னேஷ் சிவன், அதே தலைப்பில் நயன்தாரா நடிக்கும் படத்தைத் தயாரிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. நெற்றிக்கண் தலைப்பு உரிமையைத் தந்த கவிதாலயா நிறுவனத்துக்கு விக்னேஷ் சிவன் நன்றி தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் நெற்றிக்கண் படத்தை மிலிந்த் ராவ் இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு சித்தார்த் நடித்த அவள் படத்தை இயக்கினார். கதாநாயகி கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டுள்ள இப்படத்துக்கு இசை – கிரிஷ்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of