மெர்சலாக நடந்து வரும் விஜய்! வைரலாகும் வீடியோ!

247

மெர்சல் படத்துக்கு பிறகு அட்லீயின் இயக்கத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருக்கும் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தையும், பாடலாசிரியர் விவேக் எழுதுகிறார்.

மேலும் யோகிபாபு, பரியேறும் பெருமாள் கதாநாயகன் கதிர், விவேக் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜயின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், விஜய் கருப்பு நிற ஆடை அணிந்து வருகிறார். இந்ந வீடியோவை விஜயின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.