‘விஜய் 64’ – வெளியானது “மாஸ்டரின்” செகண்ட் லுக் போஸ்டர் | Second Look Poster

754

தளபதி ’64’, பிகில் படத்தை தொடர்ந்து விஜய் தனது 64வது படத்தில் நடித்து வருகின்றார். லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கி வருகிறார். ‘மாஸ்டர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Second-look-poster

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 2020ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி இந்த மாஸ்டர் படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இதில் விஜய்யின் ‘லுக்’ மட்டும் இடம் பெற்றிருந்தது. தற்போது இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

குறிப்பிட்டபடி தற்போது மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of