விஜய்-அஜித் ரசிகர்கள் அலப்பறை : டுவிட்டரில் தொடங்கிய சண்டை கத்திக்குத்தில் முடிந்த கொடூரம்..!

662

சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது வழக்கமானது தான். அது சில சமயங்களில் ஹேஷ்டேக் ட்ரெண்டிங்காக வெளிப்படும்.

சமீபத்தில் கூட #RIPVIjay என்ற ஹேஷ்டேகை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்ய, #LongLiveVijay என்ற ஹேஷ்டேகை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர். #RIPVijay என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானதைத் தொடர்ந்து சிபிராஜ், ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

ஆனால், சமூக வலைதளங்களில் முற்றிய மோதல், தற்போது நேரடியாகவே தாக்கிக் கொள்ளும் அளவிற்கு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, புழல் அருகே உள்ள இலங்கையிலிருந்து புலம்பெயர் மக்கள் வசித்துவரும் குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் உமாசங்கர்(32 வயது), ரோஷன்(34 வயது) ஆகியோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த திங்கள் கிழமையன்று உமாசங்கர் மற்றும் ரோஷன் ஆகியோர் பேசிக்கொண்டிருந்த போது அஜித் ரசிகரான உமாசங்கர் விஜய் குறித்து தரக்குறைவாகப் பேசியதாகத் தெரிகிறது.

இதனால், உமாசங்கர் மற்றும் ரோஷன் இடையே வாக்குவாதம் முற்றியதில், கடும் கோபமடைந்த ரோஷன் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்துவந்து உமாசங்கர் தலை, கழுத்து மற்றும் நெஞ்சில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

படுகாயமடைந்த உமாசங்கர் ரத்தவெள்ளத்தில் சரிந்தார். உமாசங்கரின் உடலை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு உடல்நிலை நிலைமை கவலைக்கிடமான நிலையில், அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றினர்.

அங்கு உமாசங்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. எனினும், உமாசங்கரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரோஷனை கைது செய்த புழல் காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of