கெத்தை விட்டுக்கொடுக்கும் நயன்தாரா..? – விஜய்க்காக எடுத்த அதிரடி முடிவு..?

903

தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் நயன்தாரா. அவர் நடிக்கும் படமெல்லாம் ஹிட் ஆகவில்லை என்றாலும், அவரது நடிப்பின் தனித்துவம் அனைவரையும் கவரும் வண்ணமே ஒவ்வொரு படத்திலும் அமையும்.

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அவர், நடிகர் அஜித்தை போன்று தன் பட சம்பந்தப்பட்ட விழாக்களில் பங்கேற்க மாட்டார்.

இப்படியான நிலையில், விஜய்யுடன் அவர் நடித்துள்ள பிகில் படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொள்வாரா? மாட்டாரா? என்கிற கேள்விகள் எழுந்து கொண்டிருந்தன.

ஆனால் தற்போது பிகில் ஆடியோ விழாவில் நயன்தாரா கலந்து கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் படம் என்கிற காரணத்திற்காக நயன்தாரா இறங்கி வந்திருப்பதாக சினிமா வட்டாரத்தினர் கிசுகிசுத்து வருகின்றனர்.