அரசியலில் குதித்தார் விஜய் ஆண்டனி???

524

திமிரு புடிச்சவன் படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக கொலைகாரன் படம் ரிலீசாக இருக்கிறது. விஜய் ஆண்டனி தற்போது, அக்னிச் சிறகுகள், தமிழரசன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, எனது அடுத்த படத்தில் மெட்ரோ பட இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனுடன் இணைவதில் மகிழ்ச்சி. டி.டி.ராஜா இந்த படத்தை தயாரிக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படம் அரசியல் படமாக உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.