மன்னிப்பு கேட்ட விஜய் நெகிழ்ந்த இந்திரஜா | Vijay said sorry to Indiraja

746

விஜய் நடித்து அண்மையில் திரைக்கு வந்துள்ள படம் பிகில். இப்படத்தில் நயன்தாரா, இந்துஜா, அமிர்தா, ரெபோ மோனிகா, வர்ஷா, இந்திரஜா உள்பட பலர் நடித்துள்ளார். இவர்களில் இந்திரஜா, காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் ஆவார். உடல் பருமனாக இருக்கும் அவரை இந்த படத்தில் ஒரு காட்சியில் குண்டம்மா என்று சொல்லி திட்டி உசுப்பேற்றுவார் விஜய். உடல் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்த விஜய்க்கு சமூகவலைதளங்களில் எதிர்ப்புகள் எழுந்தன.

shankar

இந்நிலையில், தற்போது இந்திரஜா அளித்த ஒரு பேட்டியில், ”என்னை குண்டம்மா என்று சொல்வதற்கு விஜய் அவர்கள் தயங்கினார். ஆனால் படத்தின் காட்சிக்கு அது தேவைப்பட்டதால் அவர் அப்படி நடித்தார். நானும் எந்தவித சங்கடமும் இன்றி இயல்பாகவே நடித்தேன். இருந்தபோதும், அந்த காட்சியில் நடித்த பிறகு அவர் என்னிடம் வந்து அவ்வாறு சொல்லி நடித்ததற்கு மன்னிப்பு கேட்டார்’ என தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of