அஜித் ஸ்டைலுக்கு மாறும் விஜய்..? – கிசுகிசுக்கும் ரசிகர்கள்..!

531

மாஸ்டர் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் நடிகர் விஜய். அந்தப் படத்தில், அவரோடு, விஜய் சேதுபதி மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு பாக்கியராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படம், வரும் ஏப்ரல் 9ல் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.படத்தின் இறுதிகட்டப் படபிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சூழலில், நடிகர் விஜய்யின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை எல்லோரும் எதிர்பார்க்கின்றனர்.

ஏற்கனவே, இயக்குநர் சமுத்திரக்கனி நடிகர் விஜய்க்காக ஒரு கதை தயார் செய்து வைத்திருக்கிறார். இந்தக் கதையை அவர் நடிகர் விஜய்யிடம் சொல்லி வந்தார்.

ஆனால், அந்தக் கதையை படமாக்குவது குறித்து, நடிகர் விஜய் எதுவும் சொல்லாததால், அது தொடர்பாக மேலும் எந்தத் தகவலும் இல்லாமல் இருக்கிறது.

இந்நிலையில், அருண் ராஜா காமராஜ், வெற்றி மாறன், மகிழ் திருமேனி, பேரரசு, மோகன் ராஜா உள்ளிட்ட பல இயக்குநர்களும், நடிகர் விஜய்க்கு கதை சொல்லி இருக்கின்றனர்.

அதனால், அடுத்து நடிகர் விஜய், யார் சொன்னக் கதையில் நடிக்கப் போகிறார் என தெரியாமல் குழப்பம் நீடிக்கிறது.வழக்கமாக, நடிகர் விஜய், தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கு கமிட்டாவார்.

ஆனால், மாஸ்டர் படம் முடிந்ததும், அவர், ஒருபடத்தை முடித்து விட்டு, அடுத்தப் படத்துக்குச் செல்லலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். நடிகர் அஜித் பின் பற்றும் ஸ்டைல் இது. அதனால், நடிகர் அஜித் ஸ்டைலுக்கு விஜய் மாறுகிறார் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of