விஜய் ரசிகர்களை வம்பிழுத்து மாட்டிக்கொண்ட சீமான்

694

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இயக்குனருமான சீமான் மேடையில் நடிகர் விஜயை விமர்சித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் கோவத்தின் உச்சியில் உள்ளனர்.

சீமான் திரைத்துறையில் அதிகம் ஈடுபாட்டுடன் இருந்தவர் தான். 2008 ல் வெளிவந்த ‘வாழ்த்துகள்’ திரைப்படத்தின் தோல்வியால் சினிமாவில் இருந்து விலகி, அரசியலில் முழு ஆர்வம் காட்டி வந்தார். இயக்குனர் என்ற பாணியில் சீமான் இல்லாமல் சிறு சிறு குணச்சித்திர பாத்திரத்தில் நடித்து வந்தார்.

பின் நடிகர் விஜய் ஐ வைத்து ‘பகலவன்’ என்ற படத்தை இயக்கவுள்ளேன் என பல இடங்களில் பேட்டி அளித்தும் உள்ளார். பின் அந்த எண்ணத்தை அதன் பின் பேசவில்லை. நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசி சர்ச்சையுண்டாக்கியுள்ளார்.

விஜய் குறித்து சீமான், “என் தம்பி ஒருத்தன் இருக்கான் விஜய். சர்கார் படத்தில் வசனம் பேசினால்,அதை ஒப்புக் கொள்ள வேண்டும்ல. “அம்மா ஜெயலலிதா மீது நான் மிகவும் பற்றுக் கொண்டவன்” என்று பேசுவது சரியா? (விஜய் பேசியது போல்  கையைக் கட்டிக் கொண்டு பேசுகிறார்). நீயெல்லாம் என் தம்பியா? எடப்பாடி பழனிசாமிக்கெல்லாமா பயப்படுவது?. உன் மீது பெரிய மரியாதை வைச்சுருந்தேன்டா. என்ன இப்படி ஆயிட்ட. முதலைமைச்சரே ஒரு அடிமை. மோடியோட அடிமை. 6 மாதம் கழித்து பதவியிலிருந்து கீழே இறங்கினால், பக்கத்து வீட்டுக்காரர் கூட அவரை மதிக்க மாட்டார். நீ போய் அவரை எல்லாம் பார்த்து.. ச்சீ… ஒரு விரல் புரட்சியாம்.. என்ன புரட்சி… வறட்சி… என் படத்துல நடிக்க மாட்டார். ஆனால், நான் பேசுறதை எல்லாம் பேசிட்டு இருப்பார்.” என்று கடுமையாக பேசியுள்ளார்.

இதனையடுத்து விஜய் ரசிகர்கள் இணையத்தில் சீமானை விமர்சித்து வருகிறார். நேற்று டிவிட்டர் டிரெண்டில் #thiruttupayaseeman என்று ஹாஷ் டாக் மூலம் சீமான் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  விஜய் ‘பகலவன்’ படத்திலிருந்து விலகி கொண்டதால் கோபத்தில் இவ்வாறு சீமான் பேசியுள்ளார் என்று விஜய்க்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of